ஸ்ரீகஜமலை தெய்வஸ்தானம் ஸ்தல வரலாறு
முன்னொரு காலத்தில் வனாந்திர பூமியாக விளங்கிய இந்தக் கஜகிரிக்குன்றில் ஜமீன்கள் ஆட்சிக்காலத்திற்கு முன்பிருந்தே சுயம்பு முருகப் பெருமான் வள்ளி தேவசேனா சமேதராய் மலைமேல் பழவூர் = தொன்னாடு ஊர்களுக்கு இடையே உள்ள குதிரை சாலட்டுவண்டி மலைப்பாதை அருகே அமைந்து அருள் பாளித்து வருகிறார்.
அவரின் அடிச் சுவடொட்டியே பெருங்கரணை ஸ்ரீஸ்ரீ எல்லப்பசித்தர் / உடனாய தெய்வப்ரவிகள் இங்கு எம்பெருமான் அருட்சக்தி நிறம்பி உள்ளது ஆலயம் சமைக்க வேண்டும் என கோரவே, ஜமீன்கள் ஒப்புக்கொள்ளாமையினாலும் , அவர்களின் கோலத்தைக் கண்டு ஏலனம் பேசிடவே…. போங்கடா; எங்கப்பன் முருகன் எங்கிருந்தாலும் வருவான் என்றுரைத்து பெருங்கரணையில் எம்பெருமானை பிரதிஷ்டை செய்து பூஜித்து வரவே , அங்கும் பாகுபாடு சில புள்ளுருவிகள்பேசிட வே குபேர மூலையில் குளமமைத்து கிழக்கு நோக்கி திட வைராக்யம் ஏற்று ஜீவசமாதியடைந்தார்.
மனம் / வாக்கு/காயம் = ஜீவனோடு இனக்கம்பெற்ற புன்னிய ஆத்மாக்கள் சொன்னது பலிக்கும் என்பது சத்தியம்.
அங்ஙனமே, இங்கு சோடஷ நிலை வெற்றிமயில்வே லாயுதர் பிரதிஷ்டை ஆகவுள்ளார். பரிவார தெய்வங்களாக, ஸ்ரீ ஞானதேவி சமேத உச்சிஷ்டம ஹாகணபதி சுவாமி/ ஸ்ரீ சாம்ராஜ்ய வராஹி தேவி /
ஸ்ரீ மஹா பைரவர் சுவாமி. காவல் = வாழ்முனி/இடும்பர் என இறையருள் அமைத்துக்கொண்டது.
16 அடி விஷ்வரூபமுருகப்பெருமான் உலகிலேயே மிகப்பெரிய கருவறை உயிர்ச் சிற்பம்.





