கஜமலை தெய்வஸ்தானம்

முக்கிய விழாக்கள்/நிகழ்வுகள்

ஆஷாட நவராத்திரி

மங்கள மஞ்சள் மாலை/இருமுடி

ஆனி/ஆடி மாதங்கள் இணைவாம் காலத்தில் 41 நாட்கள் விரதம் இருந்து மஞ்சளாடை உடுத்தி மாலை மற்றும் இருமுடியை ஸ்ரீ சாம்ராஜ்ய வாராஹித்தாயின் பாதங்களில் சமர்ப்பித்தல்/அன்னதான நிகழ்வு.

விரதத்தின் கடைசி 9 தினங்களில் , தினம் ஒரு அலங்காரமாக ஓன்பது வித அலங்காரமாம் கண்கொள்ளாக் காட்சி.

மாத நிகழ்வுகள்

>வளர்பிறைப் பஞ்சமி / தேய்பிறைப் பஞ்சமி மாலை  4.00-5.00pm உலக நல வேள்வி/அன்னதானம்

சங்கடஹர சதுர்த்தி (ம) தேய்பிறை அஷ்டமியில் மாலை நேர சிறப்பு பூஜைகள்.

 

மஹா பைரவாஷ்டமி விரதம்

48 நாட்கள் ருத்ராக்ஷ மாலை அணிந்து விரதம் இருந்து கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று ஸ்ரீ நடு பழனி எல்லப்பசித்தர் ஜீவ சமாதியில் மும்முடி கட்டி கஜமலை மஹாபைரவர் சுவாமி பாதத்தில் சமர்ப்பிக்கும் அற்புத நிகழ்வு/அன்னதானம்….

 

சித்திரைப் பெளர்ணமி பால்குட விழா

கிராம தேவதை ஸ்ரீ பொன்னி அம்மன் ஆலயத்தில் இருந்து பாதயாத்திரையாக பால்குடம் சுமந்துவந்து ஸ்ரீ சாம்ராஜ்யத்தாய்க்கு சமர்ப்பிக்கும் முக்கிய நிகழ்வு/அன்னதானம்.

 

பெளர்ணமி / அமாவாசை காலங்களில் பதிவு செய்து தனிப்பட்ட குடும்ப சுபிட்ஷவேள்விப் பூஜைகள் செய்துகொள்ளலாம்.

 

ஸ்ரீ வராஹினி கடை

>> ஆலய மூலவர் சுவாமி படங்கள்,

>> சுவாமி வெள்ளி டாலர்கள்,

>> ஸ்ரீ வராஹியம்மா விளக்கு,

>> மூலிகை தீபம்

>> மூலிகை எண்ணெய்

>> ரட்ஷைகள்

>> ஸ்ரீவராஹி மா திருஷ்டி நிவர்த்தி படிகாரக் கல்,

>> அம்மா யந்திரம்,

>> அம்மா மூலிகை வேர்கள்

>> அம்மா சிலைகள்,

>> ஸ்ரீவராஹிக்களி அல்வா தெய்வஸ்தான சிறப்பு பிரசாதம். கிடைக்கும்.